மங்கலம்பேட்டை பேரூர் கழக செயலாளர் பாத்திரக்கடை செல்வம், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர் முருகன், மங்கலம்பேட்டை பேரூராட்சி தலைவர் சம்சாத் பேகம், ஒன்றிய அவைத்தலைவர் ஞானமணி, ஆத்மா குழு தலைவர் குமார், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அறிவுடைநம்பி, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் பாரி முகமது இப்ராஹிம், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் முகமது யூசுப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருவேப்பிலங்குறிச்சி கிளை செயலாளர் கோவிந்தசாமி, ஒன்றிய துணை செயலாளர் முத்துவேல் ஆகியோர் வரவேற்புரையாற்றினர். தலைமை கழக பேச்சாளரும், திராவிட எழுத்தாளருமான கடலூர் கு.வாஞ்சிநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தி.மு.க அரசின் இரண்டு ஆண்டு சாதனைகள் பற்றியும், திராவிடமாடல் ஆட்சியின் சிறப்புகள் பற்றியும் சிறப்புரையாற்றினார்.
முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராசப்பா, மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன், ஒன்றிய பொருளாளர் பன்னீர்செல்வம், ஒன்றிய துணைச் செயலாளர் வளர்மதி சாரங்கபாணி, மாவட்ட பிரதிநிதி வெங்கடாசலபதி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இளையராஜா, பாஸ்கர், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் செந்தில்நாதன், தொண்டரணி தொகுதி அமைப்பாளர் அசோக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் துணை அமைப்பாளர் நடராஜன், துணை அமைப்பாளர் பாலு ஆகியோர் நன்றி கூறினர்.
No comments:
Post a Comment