கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பின்னலூர் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை அருகில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று இருந்து வருகிறது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் ஏணிப்படியில் ஒருவர் தூக்கிட்ட நிலையில் தொங்குவதாக சேத்தியாத்தோப்பு போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணை செய்ததில் தூக்கில் பிணமாகத தொங்கியவர் அதே கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் அருண்(32) என்பதும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் ஏணிப்படியில் கைலியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பதும் தெரிய வந்தது.
இறந்த அருணுக்கு திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் ஏணிப்படியில் லாரி ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேத்தியாத்தோப்புபோலீசார் வழக்கு பதிந்து லாரி ஓட்டுநர் அருண் இறப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment