கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற நெய்வேலி பாரம்பரிய சிலம்பம் மற்றும் தற்காப்பு கலை அறக்கட்டளை சேர்ந்த மாணவர்களுக்கு நெய்வேலியில் SME ஆப்பரேட்டர் கலையரங்கில் பரிசளிப்பு விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட
நெய்வேலி சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் அவர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
நெய்வேலி பாரம்பரிய சிலம்பம் மற்றும் தற்காப்பு கலை அறக்கட்டளையின் பயிற்றுனர் பார்த்தசாரதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் அறக்கட்டளையில் சிலம்பம் பியின்று வந்த 32 மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கிய நெய்வேலி துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் அவர்கள் பேசுகையில் தமிழரின் பாரம்பரிய கலையான சிலம்ப கலையை மாணவர்கள் ஆர்வத்துடன் பயின்று வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் மாணவர்கள் உடல் நலம்,
மனவலிமை கொண்டவர்களாக திகழ வேண்டும் எனவும் மொபைல் போன் பார்ப்பதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும் இதனை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் மேலும் தீய பழக்கத்தில் மாணவர்கள் ஈடுபடுவதையும் முற்றிலும் தவிர்த்து விளையாட்டு துறைகளில் ஆர்வம் செலுத்த வேண்டும் இதுபோன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு பல பரிசுகளையும் சான்றிதழ்களையும் பெற்றால் பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் எளிதில் விளையாட்டு ஒதுக்கீட்டில் தாங்கள் எண்ணிய துறையை எளிதில் தேர்வு செய்ய முடியும்
மேலும் பெண் பிள்ளைகள் தற்காப்புக் கலையை கட்டாயமாக கற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்
பின்னர் அரங்கத்தில் மாணவர்களின் சிலம்பாட்ட நிகழ்ச்சியை மாணவர்களின் பெற்றோர்களுடன் கண்டு களித்தார்.
No comments:
Post a Comment