பல ஆண்டுகளுக்குப் பிறகு சேத்தியாத்தோப்பு அணைக்கட்டிலிருந்து கடும் கோடையிலும் தண்ணீர் திறப் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 10 May 2023

பல ஆண்டுகளுக்குப் பிறகு சேத்தியாத்தோப்பு அணைக்கட்டிலிருந்து கடும் கோடையிலும் தண்ணீர் திறப்


பல ஆண்டுகளுக்குப் பிறகு சேத்தியாத்தோப்பு அணைக்கட்டிலிருந்து கடும் கோடையிலும் தண்ணீர் திறப்பு. மக்கள் மகிழ்ச்சி




கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான அணைக்கட்டு உள்ளது. இந்த அனைக்கட்டின் மொத்த நீர்மட்டம் 7.5 அடியாகும்.. வெள்ளாற்றில் கடலுக்கு வடிகாலாக செல்லும் தண்ணீரை தேக்கி பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக கடலுக்கு அருகில் சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் கட்டப்பட்டுள்ள முக்கிய நீர்த்தேக்க அணைக்கட்டுமாகும். 


இதன் மூலம் சுற்றுப்புற பகுதிகளில் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெற்று வருகிறது. 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கும் படியாக இருக்கிறது. இந்நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு கோடையில் அணைக்கட்டுக்கு மேற்குப் பகுதியில் இருந்து வரும் தற்போதைய மழை வடிகால் நீர் 1,100 கன அடி வந்து கொண்டிருப்பதையடுத்து அணைக்கட்டு அதன் முழு கொள்ளளவான 7.5 அடியை எட்டியது.


அதனால் அணைக்கட்டில் இருந்து வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் வெள்ளாற்றில் உபரியாக வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அணைக்கட்டின் இரண்டு மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது. கோடையில் திடீர் நீர்வரத்து உயர்வு மூலம் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதைக்கண்டு அதிசயமாகவும் ஆச்சரியமாகவும்  அப்பகுதியினர் பார்த்துச் செல்கின்றனர்.

No comments:

Post a Comment

*/