சிறுமிக்கு இருவிரல் பரிசோதனை விவகாரம்; ஆளுநருக்கு எதிராக குடியரசு தலைவருக்கு கோரிக்கை. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 26 May 2023

சிறுமிக்கு இருவிரல் பரிசோதனை விவகாரம்; ஆளுநருக்கு எதிராக குடியரசு தலைவருக்கு கோரிக்கை.


சிறுமிக்கு இருவிரல் பரிசோதனை விவகாரம்: ஆளுநர் ஆர் என். ரவி பொய் சொன்னாரா? பதவி நீக்கம் செய்து குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

உண்மை நிலையை மறைத்து தமிழ்நாடு அரசு மீது அவதூறு பரப்பி அரசியல் சாசனத்திற்கு எதிராக  கருத்து தெரிவித்து வரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை பதவி நீக்கம் செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம்.என் ராதா கோரிக்கை விடுத்துள்ளதுள்ளார்.


தமிழக கவர்னர் ஆர். என். ரவி இந்திய அரசியல் சாசனத்தின் படி செயல்படாமல் அரசியல்வாதியை போல் தனது மனதில் பட்டதை வெளியில் பேசி வருவது கண்டனத்திற்குரியது. பல நூற்றாண்டு காலமாக பக்தர்கள் சிதம்பரம் நடராஜர் கோவில் சிற்றம்பல மேடை (கனக சபை) ஏறி வழிபடும் நடைமுறைக்கு தடை விதித்த தீட்சிதர்களின் செயலை சரி என்று கூறுகின்றா? கவர்னர் சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தை திருமணத்தை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக வந்த  புகார்களை விசாரித்து ஆதாரத்தின் அடிப்படையில் போலீஸ் வழக்கு பதிவு செய்து தொடர்புடையவர்களை கைது செய்துள்ளது.


சட்டத்துக்கு விரோதமாக குழந்தை திருமணம் நடைபெறுவதை அரசு எப்படி வேடிக்கை பார்க்கும் இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கவர்னர் பேசியுள்ளார் இது வேதனைக்குரியது எனவே தமிழக கவர்னர் தற்போக்கி மாற்றுக்கொள்ள வேண்டும் அரசியல் அமைப்பு சட்டத்தை மதிக்காமல் செயல்பட்டு வரும் தமிழக கவர்னர் ஆர் என்.ரவியை  பதிவிலிருந்து இந்திய குடியரசுத் தலைவர் நீக்கி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .



மேலும் அவர் கூறியதாவது:- உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை தீட்சிதர்கள் நிர்வகித்து, பூஜை செய்து வருகின்றனர். தீட்சிதர்கள் குடும்பத்தில் பால்ய விவாகம் எனப்படும் குழந்தைகள் திருமணம் நடப்பதாக தொடர்ந்து தமிழக அரசுக்கு புகார் வந்தது இது தொடர்பாக சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உரிய விசாரணை நடத்தி வழக்குகளை பதிவு செய்தனர் இந்த வழக்கு தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டனர்.


இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்திருந்த பேட்டியில், "நடராஜர் கோயில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு குழந்தை திருமணம் நடைபெறவில்லை, ஆனால், அதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அத்துடன் அவர்களின் குழந்தைகளுக்கு கன்னித்தன்மையை பரிசோதிக்கும் வகையில் இரட்டை விரல் பரிசோதனை நடைபெற்றது" என தமிழக அரசின் மீது குற்றம் சாட்டியிருந்தார்.


தமிழக டிஜிபி சைலேந்திரபாபு இதற்கு உடனடியாக பதில் அளித்தார். தடைசெய்யப்பட்ட இருவிரல் சோதனை எதுவும் சிறுமிகளுக்கு நடைபெறவில்லை என அவர் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இது குறித்து விசாரணை நடத்த தேசிய குழந்தை உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த் மற்றும் மருத்துவ குழுவினர் நேற்று விசாரணை மேற்கொள்ள சிதம்பரம் நகருக்கு வந்திருந்தனர்.


இவர்கள் நடராஜர் கோயில் உள்ளே சென்று சம்பந்தப்பட்ட தீட்சிதர்களின் குழந்தை மற்றும் தீட்சிதர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதேபோல் அப்போது பரிசோதனை செய்ததாக கூறப்படும் மருத்துவர்கள் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் விசாரணை மேற்கொண்டார் இவை அனைத்தும் முடிவடைந்த பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது செய்தியாளர்களிடம் ஆனந்த் பேசுகையில், "நடராஜர் கோயில் தீட்சிதர்கள் உள்ளிட்ட மூன்று தரப்பினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையில் இருவிரல் சோதனை நடைபெறவில்லை என்பது உறுதியாகி உள்ளது. மேலும் மருத்துவ சோதனையே நடைபெற்றதாக தெரிகிறது.


அதே நேரத்தில் குழந்தைத் திருமணம் எதுவும் நடைபெறவில்லை. போலீஸ் கட்டாயத்தின் பெயரில் தீட்சிதர்களின் குழந்தைகள் ஒப்புக்கொண்டதாக கூறியுள்ளனர். மேலும் குழந்தைத் திருமணத்தை சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் நடத்தி வருகிறார்கள் என்று கூறுபவர்களிடமும் விசாரணை மேற்கொண்டு அதன் அறிக்கையை 2 நாட்களுக்குள் ஆணையத்தில் சமர்ப்பிப்போம்" என்று கூறினார்.


தமிழக ஆளுநர் இருவிரல் சோதனை நடைபெற்றுள்ளது என்று புகார் கூறியுள்ள நிலையில் அப்படி எதுவும் நிகழவில்லை என தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே தமிழக ஆளுநர் ஆர் என். ரவி சரியான புரிதல் இல்லாமல் உண்மைக்கு புறம்பாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கக்கூடிய அளவில் தமிழக அரசை குற்றம் சாட்ட வேண்டும் என்ற நோக்கத்திலேயே பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது வேதனைக்குரியது. எனவே உடனடியாக குடியரசுத் தலைவர் தமிழக ஆளுநரை பதவியில் இருந்து நீக்கி அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் குடியரசு தலைவருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

*/