குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் ஆளும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 29 May 2023

குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் ஆளும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் கடலூர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் கடலூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். 

ஆர்ப்பாட்டத்தின் போது மக்களை வஞ்சிக்கும் திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது, மேலும் ஆர்ப்பாட்டத்தில் சொரத்தூர் ராஜேந்திரன் அவர்கள் பேசுகையில் திமுக ஆட்சியின் இரண்டு ஆண்டு சாதனை மதுவால் விழுப்புரம் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சமீபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மட்டுமே எனவும் திமுக ஆட்சியில் அரசு அலுவலர்கள் கொலை செய்யப்படுவதும் காவல்துறையினர் தாக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.



மேலும் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த பல மக்கள் பயன்பெறும் திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளது என கடுமையாக சாடி பேசினார் மேலும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினரும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும் ஆகிய எம் ஆர் கே பன்னீர்செல்வம் குறித்து பேசுகையில் வேளாண்துறை அமைச்சர் சமீபத்தில் நடந்த மாநாட்டில் முருகப்பெருமானை பற்றி பேசியது சர்ச்சைக்கு உள்ளானது என சாடினார்.


மேலும் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு அமலாக்க துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்தார், மேலும்  நல்வழியில் ஆட்சி நடந்திட வருகின்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மத்தியில் கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி நெய்வேலி ஒன்றியத்துக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/