கூத்தப்பாக்கத்தில் அருள்மிகு ஸ்ரீ ஞான விநாயகர் ஸ்ரீ ஜெய சுப்பிரமணியசாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 25 May 2023

கூத்தப்பாக்கத்தில் அருள்மிகு ஸ்ரீ ஞான விநாயகர் ஸ்ரீ ஜெய சுப்பிரமணியசாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்.


கடலூர் கூத்தப்பாக்கம் விஜயலட்சுமி நகரில் அருள்மிகு ஸ்ரீ ஞான விநாயகர் ஸ்ரீ ஜெய சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாம கரணம் சூட்டி தச தரிசனம் யாத்ரா தானம் மங்கள வாத்தியம் முழங்க கடம் புறப்பட்டு கோபுர கலசங்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 


பின்னர் மூல மூர்த்தி களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. எஜமானர் உற்சவம் மகா தீபாரதனை காட்டப்பட்டது பக்தர்களுக்கு அருட்பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலையில் சாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு சாமி அலங்காரம் செய்யப்பட்டு வானவேடிக்கையுடன் விஜயலட்சுமி நகரில் அனைத்து வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 


இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கடலூர் கூத்தபாக்கம் குகஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் தலைமையில்   ஸ்ரீ ஜெய சுப்ரமணியர் சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் சிறப்போடு நடைபெற்றது.

No comments:

Post a Comment