குமராட்சி அருகேசாலை வசதி செய்துதரக்கோரி கிராம மக்கள் சாலையில் நாற்று நடும் போராட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 12 May 2023

குமராட்சி அருகேசாலை வசதி செய்துதரக்கோரி கிராம மக்கள் சாலையில் நாற்று நடும் போராட்டம்.


குமராட்சி அருகேசாலை வசதி செய்துதரக்கோரி கிராம மக்கள் சாலையில் நாற்று நடும் போராட்டம்.



கடலூர் மாவட்டம் குமராட்சி ஒன்றியம் சாவடி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள்  வசிக்கின்றனர். இவர்கள், அனைவரும் மருத்துவமனை, பள்ளி மற்றும் அத்தியாவசியப்பொருட்களை வாங்க, குமராட்சி செல்லும் சாலையை பயன்படுத்துகின்றனர். இந்த சாலை கடந்த பல ஆண்டுகளாக சேதமடைந்து கிடப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.



குண்டும், குழியுமாக உள்ள சாலையில் குளம்போல் மழை நீர் தேங்கிக் கிடக்கிறது. இதனால், வாகனங்களை ஓட்டிச் செல்ல முடியாமல் அவதிப்படுவதாகவும், இரவு நேரங்களில் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைவதாகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.




இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், சேதமடைந்துள்ள சாலையில் நாற்று நடும் போராட்டத்தில்  ஈடுபட்டனர். மேலும், தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் நாற்று நட்டு தங்கள் மனவேதனையை கிராமிய பாடல்களாகப்பாடி தங்கள்எதிர்ப்பை தெரிவித்தனர்.




அப்போது அவர்கள், சாலையை சீரமைத்து புதிய சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதன் பிறகும் அரசு சாலைவசதிசெய்வதில் மெத்தனம் காட்டினால் அடுத்த கட்டமாக சிதம்பரம்  திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபடப்போவதாக கிராம பொதுமக்கள் தெரிவித்தனர்

No comments:

Post a Comment

*/