கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு காமராஜர் வாய்க்கால் சாலை சேதம் அடைந்திருந்த நிலையில், புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் தொகுதி மேம்பாட்டு நிதி 16.50 லட்சத்திலிருந்து தரமான சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் அப்பணிகள் முடிவுற்று இன்று பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. இதனை கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன் ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
இதில் அதிமுக நிர்வாகிகள் சேத்தியாதோப்பு நகர செயலாளர் எஸ் ஆர் மணிகண்டன் துணைச் செயலாளர் இள சம்பத், கடலூர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன், கடலூர் மேற்கு மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் வீர மூர்த்தி, நகர பொருளாளர் ராமலிங்கம் அவைத்தலைவர் கோழி கோவிந்தசாமி, மாவட்ட பிரதிநிதி தெய்வ ராஜகுரு,முன்னாள் நகர செயலாளர் எஸ் கே நன்மாறன், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் கே பி ஜி கார்த்திகேயன், வார்டு கவுன்சிலர்கள் குணசேகரன், அஞ்சா புலி,ஸ்ரீதர், மதியழகன், சர்புதீன், நேரு, ஹக்கீம்,கமலக்கண்ணன், ஆதனூர் பாலு,விஸ்வநாதன், வீரமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் வாகன ஓட்டிகள் உள்ளிட்டவர்கள் அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
No comments:
Post a Comment