கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் எம் ஆர் கே கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் தினக்கூலி தொழிலாளர்கள், ஆலையின் பணியாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் பணிசெய்து வருகின்றனர்.இந்நிலையில் இவர்கள் ஆலையின் வளாகத்தில் அனைத்து தொழிற்சங்கங்க தொழிலாளர்களும் இணைந்து தங்களது ஊதிய உயர்வு மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது தங்களது நியாயமான.கோரிக்கைகளை அரசும், ஆலை நிர்வாகமும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அதிகாரிகள் மற்றும் ஆலையின் நிர்வாகமும் தொழிலாளர்கள் கடினமான நிலையைக் கருத்தில் கொண்டும் ஊதிய உயர்வு, தினக்கூலி தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்வது இவைகளில்இனியும் காலதாமதம் செய்யாமல் உடனடிநடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சேத்தியாத்தோப்பு எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஊதிய உயர்வு,பணி நிரந்தரம்கோரி அனைத்து தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment