திருவந்திபுரம் மலையில் உள்ள செம்மண் குவாரி அருளப்படுவதால் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில் உள்ள பகுதிகளில் சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள மணல் கொள்ளை போய்விட்டது.. கடலூர் ஒன்றியம் திருவந்திபுரம் ஊராட்சி உள்ள திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில் 108 திவ்ய தேசத்தில் நடுநாட்டு திருப்பதி என்று அழைக்கப்படும் இடமாகும் .திருவந்திபுரம் மலை தேவநாதசுவாமி கோயில் உள்ள இடம் சஞ்சீவி மலையை ஸ்ரீ ஆஞ்சநேயர் தூக்கிக் கொண்டு போகும்போது சிந்திய மலையாக திருவந்திபுரம் மலை என்பது ஐதீகம் உள்ளது அந்த மலை தற்போது காணாமல் போய்விடும் அபாய நிலை உள்ளது.
காரணம் இங்கே உள்ள மலையில் உள்ள செம்மண் அள்ளப்படுவதால் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் சுற்றளவு உள்ள மணல் அள்ளப்பட்டு விட்டது. தொடர்ந்து குவாரியில் செம்மண் மணல் எடுக்கப்படுவதால் திருவந்திபுரம் மலை அழிந்து விடும் அபாயம் உள்ளது. எனவே கடலூர் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து குவாரியில் அள்ளப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கடலூர் ஒன்றியம் திருவந்திபுரம் ஊராட்சி கவுன்சிலரும் கடலூர் ஒன்றிய துணை பெருந்தலைவருமாகி ய எம் .அய்யனார் மற்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment