போக்சோவில் வாலிபர் கைது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வானமாதேவி கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ்(21) என்பவர் அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி கடந்த ஓராண்டாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார், இதில் சிறுமிகர்ப்பமானார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வாலிபர் விக்னேஷை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment