நகையை பாதுகாப்பாக வைத்திருக்க சிதம்பரம் போலீசார் பொது மக்களுக்கு துண்டு பிரச்சாரம் மூலம் விழிப்புணர்வு
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜராம் அறிவுரையின் பேரில் குற்ற தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிதம்பரம் நகர காவல் துறை சார்பில் பொதுமக்கள் வங்கியிலிருந்து பணம் எடுத்து வரும்பொழுது பாதுகாப்பாக எடுத்து செல்வது குறித்தும் கோயில் திருவிழாக்கள் மற்றும் விசேஷ இடங்களுக்கு செல்லும் பெண்கள் தங்களது தங்க நகைகளை பாதுகாப்பாக எவ்வாறு அணிவது என்பது குறித்தும் விழிப்புணர்வு துண்டு பிரச்சுரங்களை சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் B. ரகுபதி IPS பொதுமக்களுக்கு வழங்கினார் மேலும் பேருந்து நிலையம் வங்கிகள் மற்றும் ATM மையங்களில் விழிப்புணர்வு எச்சரிக்கை பதாகைகள் வைத்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் ஆறுமுகம் உதவி ஆய்வாளர் லட்சுமிராமன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்
No comments:
Post a Comment