சேத்தியாத்தோப்பில் அமைந்துள்ளதேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலம் சேதமாகி வருவதை. நெடுஞ்சாலைத்துறை கவனிக்குமா? - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 1 May 2023

சேத்தியாத்தோப்பில் அமைந்துள்ளதேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலம் சேதமாகி வருவதை. நெடுஞ்சாலைத்துறை கவனிக்குமா?

சேத்தியாத்தோப்பில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலம் சேதமாகி வருவதை. நெடுஞ்சாலைத்துறை கவனிக்குமா?




கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு நகரில் புதிய பாலம் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் வட மற்றும் தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய போக்குவரத்துப் பாலமாக இருந்து வருகிறது. வெள்ளாற்றில் அமைக்கப்பட்டுள்ள பாலம் நன்றாக அமைக்கப்பட்டுள்ள நிலையில் பாலம் போதிய பராமரிப்பு இல்லாமல் போனதால் தற்போது அதன் வலிமையை இழந்து  பாலத்தின் நடுவில் உடைப்பு ஏற்பட்டு வருகிறது. பாலத்தின் பல இடங்களிலும் மழைத்தண்ணீர் தேங்கி வருவதால் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் அது பாலத்தின் உறுதித்தண்மையை வலுவிழக்க செய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கோடை மழையால் பாலத்தில் தண்ணீர் தேங்கி வருகிறது. 

இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், இதுவரை சேதமடைந்து வரும் பாலத்திற்கான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவில்லை. இப்பாலம் தஞ்சை&சென்னை உள்ளிட்ட பலவேறு மாவட்டங்களை இணைக்கும் முக்கியப் பாலமாக இருந்து வருகிறது. இப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டால் அது முக்கிய போக்குவரத்துப் பாதிப்பையும் அனைத்து வாகனங்களும் 15கிலோமீட்டர்க்குமேல் சுற்றிச்செல்லவேண்டிய அவலநிலையும் ஏற்படும். இதனால் தேவையற்ற கால விரயமும், பொருளாதார செலவினங்களும் ஏற்படும்..உடனடியாக புதிய பாலத்தினை பராமரிப்பு பணிகள் செய்து பாலத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பு சரிசெய்து தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி பொதுமக்கள், பல்வேறு கிராமமக்கள், வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

*/