குமராட்சி ஊராட்சியில் மே தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 1 May 2023

குமராட்சி ஊராட்சியில் மே தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது


குமராட்சி ஊராட்சியில் மே தின கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் தலைமையில்  நடைபெற்றது, முன்னதாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உமாமகேஸ்வரி அனைவரையும் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக வட்டார வளமை மேலாளர் இளவரசன், அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை கணித ஆசிரியர் சுப்பிரமணியன் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சுகுணா பேராசிரியர் குமரேசன், உடன் ஊராட்சி செயலர் சிலம்பரசன் ஒருங்கிணைப்பாளர் சிங்கராசு வார்டு உறுப்பினர்கள் ஆர்கே.பாவாடை ராஜமலையசிம்மன் தமிழரசன் மணிகண்டன் ராஜலட்சுமி மணிவாசகம் மற்றும் சமூக சேவகர் திருமேனி பாபு ஆனந்தராஜ் குணசேகரன் சுபா சசிரேகா ஆனந்தவல்லி  உள்பட பலர் கலந்து கொண்டு கீழ்க்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.

குமராட்சி ஊராட்சி பகுதியில் தீயணைப்பு நிலையம் அரசு கலைக் கல்லூரி  அவசர ஊர்தி 108 வேளாண்மை விரிவாக்க மையம் போன்ற அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து தந்த தமிழக முதல்வர் உழவர் நலத்துறை அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் ஒன்றிய பெருந்தலைவர்  அனைவருக்கும் நன்றி கூறினர்.


குமராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு போதுமான கழிப்பறை வசதிகள் கட்டி முடித்த பின்பே மாணவர்களை பள்ளியில் சேர்ப்பது என பெற்றோர்கள் தெரிவித்தனர் 


குமராட்சி பகுதியில் வேலைக்கு சென்று இரவு நேரத்தில் வருகின்ற பொழுது அடித்து செல்போன்  சங்கிலி பறிப்பது வாகனத் திருட்டில் ஈடுபடுவது போன்ற குற்ற செயல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது கடந்த எட்டு மாதத்துக்கு முன்பு காவல் நிலைய முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடும் கயவர்களுடைய புகைப்படம் சி சி கேமராவில் பதிவு ஆகி உள்ளது அதை காவல்துறை குற்றவாளிகள் யார் என்று தெரிந்தும் இதுவரில் கைது செய்யாமல் இருப்பதற்கு காரணம் என்ன அதேபோல் சமீபத்தில் கீழக்கரை கிராமத்தைச் சேர்ந்த சபரி என்பவரை கத்தியால் தலையில்   குத்தி விட்டு சென்ற குற்றவாளிகளை யார் என்று தெரிந்தும்  இதுவரையும் கைது செய்யாமல் இருப்பதற்கு காரணம் என்ன மேற்கண்ட செய்தியை அரசுக்கு தெரியப்படுத்துவது, உள்ளிட்ட தீர்மானங்களை  கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது 

No comments:

Post a Comment

*/