கடலூரில் புற்று நோய் மற்றும் சர்க்கரை நோய்க்கான மருந்து கண்டுபிடித்து விற்பனை செய்வதாக கூறி பண மோசடி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 29 April 2023

கடலூரில் புற்று நோய் மற்றும் சர்க்கரை நோய்க்கான மருந்து கண்டுபிடித்து விற்பனை செய்வதாக கூறி பண மோசடி


கடலூர் புதுப்பாளையம் வள்ளிகந்தன் நகரை சேர்ந்த செந்தில்குமார் மனைவி செல்வி வயது 40,  என்பவர் ஆன்லைன் மூலமாக ஏதாவது தொழில் செய்து சம்பாதிக்கலாம் என்று செல்வி ன் மெயில் ID க்கு வந்த குறுஞ்செய்தியில் ASAPY PRODUCT EXTRACT HERBAL PRODUCT,GURGAON,HARYANA என்ற நிறுவனத்தில் புற்று நோய் மற்றும் சர்க்கரை நோய்க்கான மருந்து கண்டுபிடித்து விற்பனை செய்வதாகவும் அதன் 1 லிட்டர் விலை ரூ.1,30,000/- என்றும் அதனை வாங்கி சப் டீலராக விற்பதன் மூலம் பெருத்த லாபம் கிடைக்கும் என்று கூறியதை  நம்பி அடையாளம் தெரியாத நபர்கள் கேட்ட பணத்தை சிறுக, சிறுக அவர்கள் அனுப்பி வைத்த வங்கி கணக்குகளுக்கு  மொத்தம் ரூ.32,80,000/- பணத்தை AMMAN ENTERPRISES நிறுவனத்தார் பெற்று கொண்டு ஏமாற்றியதாக கடலூர்  மாவட்ட இணையவழி குற்ற காவல் நிலையத்தில் புகார் செய்தார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரஜாராம் உத்தரவின் பேரில் ஆய்வாளர் திருமதி.பி.கவிதா மற்றும் காவல்துறையினர் விசாரணை செய்து செல்வி ன் செல்போனுக்கு வந்த கேஒய்சி தகவல் மற்றும் சம்மந்தப்பட்ட செல்போன் நிறுவனத்திலிருந்தும் வங்கியிலிருந்து பெறப்பட்ட தகவல் பேரில்  விசாரணை செய்தனர் விசாரணையில்    Okorie godswil chinaza, S/o Godswill, A2.Uche John Imeka S/o Okorie A3.Godwin Emmanuel S/O Owieocho Godwin,A4. Ebosie Uchenna Stanley S/o Simone ஆகியோர் ஈடுப்பட்டது தெரியவந்தது  மேலும் இவர்கள் இதே போன்ற வழக்கில் சென்னை வேப்பேரி  காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது உடனடியாக ஆய்வாளர் திருமதி.பி.கவிதா தலைமையிலான காவல் துறையினர் அவர்களை கடலூர் இணையவழி குற்ற காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர் விசாரணையில் செல்வியும் மோசடி செய்தது தெரியவந்ததையடுத்து ஆய்வாளர் திருமதி .கவிதா குற்றவாளிகளை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சென்னை புழல் சிறையில் ஒப்படைத்தனர். 

No comments:

Post a Comment

*/