கடலூர் மாவட்டம் குமராட்சியில் புதிதாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் மாண்புமிகு முதல்வர் முக ஸ்டாலின் பத்து மணி அளவில் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய தீயணைப்பு வண்டி ஒரு நிலைய அலுவலர் 17 பணியாளர்கள் குமராட்சி தீயணைப்பு நிலையத்தில் பணியில் ஈடுபடுவார்கள் குமராட்சி சுற்றுவட்டார பகுதியில் மீட்பு பணி குறித்து தகவல் அளிக்க 101 மற்றும் 112 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் அளித்து பொதுமக்கள் பயன்பெறலாம்.
இதில் கே குமார் மீட்பு பணிகள் துறை கடலூர் தீ அணைப்புமீட்புத்துறை நிலைய அலுவலர் பழனிசாமி சிதம்பரம் நிலையை அலுவலர் கொளஞ்சிநாதன் காட்டுமன்னார்கோயில் நிலை அலுவலர் அறிவழகன் சேத்தியாத்தோப்பு சிறப்பு நிலை அலுவலர் முரளி குமராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பூங்குயலி பாண்டியன் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியானது சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கே ஆர் ஜி தமிழ்வாணன் துணைத் தலைவர் உமா மகேஸ்வரி மற்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் குமராட்சி வரத்தக சங்கம் மற்றும் பொதுமக்கள் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment