தமிழகத்தில் 2013ல் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றோர் பணி நியமனத்திற்கு அரசாணை 149ன் படி மீண்டும் ஒரு போட்டி தேர்வு எழுத வேண்டும் என்பதை ரத்து செய்யக் கோரியும், திமுகவின் தேர்தல் வாக்குறுதியான ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு பணி வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி 177ஐ அமல்படுத்தக் கோரியும் அவர்கள் அமைதியான முறையில் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஆனால் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இது ஆசிரியர்களின் குரல்வளையை நெரிக்கும் செயல் என்று அரசாணை 149 குறித்து தெரிவித்து எதிர்த்து வந்த அப்போதய எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய தமிழக முதல்வர் சொன்னது போல்149ஐ நீக்கிவிட்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என்று கூறி திமுகவின் தேர்தல் வாக்குறுதி 177ஐஅமல்படுத்த வேண்டும் என ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல கூட்டமைப்பு சார்பில் அதன் நிர்வாகிகள் நடப்பு சட்டமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் இதனை வெளிக்கொண்டு வரவேண்டும் என புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவனிடம் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.
No comments:
Post a Comment