கடலூர் மாவட்டம் கம்மாபுரத்தில் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. நீண்ட நாட்களாக இந்த அலுவலக வளாகத்திற்குள் பாதுகாப்பற்ற நிலை இருந்து வந்தநிலையில், இது குறித்து இப்பகுதி மக்கள் புவனகிரி அதிமுக எம் எல் ஏ அருண்மொழிதேவனிடம் கோரிக்கை வைத்து கம்மாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பாதுகாப்பு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அதன்படி புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சிறப்பு நிதியை ஒதுக்கித் தந்து பணிகளைத் துவங்க உத்தரவிட்டார்.அதன்படி பணிகள் நடைபெற்று நிறைவுற்ற நிலையில் தற்போது பாதுகாப்பான சூழலில் கம்மாபுரம் சார்பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பல்வேறு கிராம மக்கள் இதற்குக் காரணமான கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவனுக்கு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment