கடலூர் மாவட்டம் வடலூர் வடக்கு கிராஸ் ரோடு ஓ.பி.ஆர் பிளாட் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரத்தில் ஈடுபட்ட இரு பெண்கள் கைது.
காட்டுமன்னார்கோயில் முடிகண்டநல்லூர் பகுதியை சேர்ந்த கலைச்செல்வன் மனைவி ஆரியமாலா வயது 50 இவர் வடலூர் ஓ பி ஆர் பிளாட் பகுதியில் விஜயகுமார் வயது 67 என்பவருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு எடுத்து பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்து விஜயகுமார் மற்றும் அவரது மனைவி ஆரியமாலாவிடம் சென்று கேட்ட பொழுது ஆரியமாலா மற்றும் அவருடன் இருந்த கோ.சத்திரம் நடுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி வயது 34 என்பவருடன் சேர்ந்து விஜயகுமார் மற்றும் அவரது மனைவியை ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் விஜயகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
No comments:
Post a Comment