சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு கிராமத்தில் சிறுத்தொண்டர் அமுது படையல் திருவிழா. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 22 April 2023

சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு கிராமத்தில் சிறுத்தொண்டர் அமுது படையல் திருவிழா.


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் உத்திராபதி ஈஸ்வரர்  சிவன் ஆலயம் அமைந்துள்ளது இங்கு வருடாந்தோறும் சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தில் அமுது படையல் படைத்து அனைவருக்கும் அண்ணம் அளிக்கப்படும்.

இங்கு 20-04-23 நேற்றிய தினம் அமுது படையில் திருவிழா கொடியேற்றம் தொடங்கி 21-04-23 அன்று முடிவடைந்தது, கோயில் வரலாறு திருச்செங்காட்டங்குடி அமுது படையல் சிறப்பு பெற்றது அதேபோல் இங்கேயும் வராலாறு தழுவி சிவனின் தீவிர பக்தரான சிறுதொண்ட நாயனார் இடம் சோதித்துப் பார்க்க வேண்டும் என்று சிவன் யாசகம் எடுத்து செல்கிறார்.

 

சிறுதொண்டர் மனைவியிடம் கேட்டுள்ளார் நான் மேற்கு திசையில் அமைந்திருக்கிறேன் உன் கணவர் சிறுதொண்டனை அனுப்பி வை என்று சென்று அமர்ந்திருக்கிறார் சிறுதொண்டர் போய் சாமி காய்கறி வகை நான் கறி சமைத்து வைத்திருக்கேன் சாப்பிட வாருங்கள் கூறினார் சிவனையே நீ கறி சமைத்து வைத்திருக்கின்றாய் நான் வர மறுக்கிறேன்.

 கேட்க நான் என் மச்சத்தை அறுத்து கறி சமைத்து வைக்கிறேன் கூற சிவன் நீ என்ன குலம் கேட்க நான் பிரம்ம குலம்  சொல்லி சாமி என்ன வேணாலும் கறி சமைக்கிறேன் கூறுங்கள் சாமி சிறுதொண்டன்  சிவனிடம் கேட்க தங்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்து கறி சமைத்து சாப்பிட அழைக்கிறேன் கூறினார் ஒரு தாய்க்கு ஒரு பிள்ளையாய் இருக்க வேண்டும் ஐந்து வயசு பாலகனாக இருக்க வேண்டும் வாசிக்க வல்லவனாக இருக்க வேண்டும் தாயார் காலை பிடிக்க வேண்டும் தந்தையார் கழுத்தை அறுக்க வேண்டும் பிறக்க போது உண்டான அன்புகள் அறுக்கும் போது உண்டான அன்புகள் இப்படி எல்லாம்  கறி சமைத்து வைத்தால் நான் சாப்பிட வருகிறேன்  5:45மணிக்குள் கறி சமைத்து வைத்திருக்க வேண்டும் இல்லையென்றால் நான் சாப்பிட வர மாட்டேன் சிவன் கூறுகிறார் சிறு தொண்டர் மனைவியும் தன் பெற்றெடுத்த சிறுவனை அறுத்து கறி சமைத்து அழைத்திருக்கிறார் சிவன் நான் எப்போது சாப்பிட்டாலும் ஒரு பறுக்கை  ஒரு பாலகனை அழைத்து ஒரு உருண்டை அளிப்பது உண்டு உங்கள் பாலகனை கூப்பிடுங்கள் என்று சிவன் கூறுகிறார் சிறுத்தொண்டர் எங்கள் மகனே தான் அறுத்து கறி சமைத்து வைத்திருக்கிறேன் சாமி அப்படி ஆனால் கொல்லப்புறமாக உங்கள் பாலகனை மூன்று முறை அழைங்கள் அப்போதுதான் நான் சாப்பிடுவேன் என்று சிவன் கூறினார் மூன்று முறை சீராளன் என்று என்று அழைக்க உயிருடன் சீராளன் ஓடி வருகிறார் சிறுதொண்டர் சிவன் தன்னை சோதித்து விட்டார் என்று வாலை எடுத்து தன் கழுத்தை மேல் வைத்து அருக்கு முயற்சி இருக்கிறார் அப்போது சிவன் வாலை வந்து பிடிக்க உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேள் நான் தருகிறேன் கூறுகிறார் சிறுதொண்டர் நான் காலந்தோறும் தங்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்று கூற சிவன் சாகா வரம் அளிக்கிறார் பிறகு சீராளருக்கு ஒரு வரம் அளிக்கிறார் எனக்கு யார் 21 நாள் வாசனை அடிக்கும் யார் படிக்கின்றாரோ அவர்களுக்கு வரம் அளிக்கிறேன் என்று கூறுகிறார் 

இந்த திருச்செங்காட்டங்குடி ஐதிகம்படி தவர்த்தாம்பட்டு கிராமத்தில் அமுதுபடையல் திருவிழா 200 வருடம் மேல் நடைபெற்று வருகிறது, இதில் திருமணம் ஆகி குழந்தை பிறக்காதோருக்கு இங்கு வந்து சிறுதொண்டர் சுவாமியார் கைகளில் சாப்பாடு சீராளன் மாவு உருண்டை வாங்கி சாப்பிட்டதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று ஐதிமாக உள்ளது.

No comments:

Post a Comment

*/