களையிழந்த வடலூர் ஆட்டு சந்தை ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு ஆடுவாங்க குவிந்த வியாபாரிகள் ஏமாற்றம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 22 April 2023

களையிழந்த வடலூர் ஆட்டு சந்தை ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு ஆடுவாங்க குவிந்த வியாபாரிகள் ஏமாற்றம்

களையிழந்த வடலூர் ஆட்டு சந்தை ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு ஆடுவாங்க குவிந்த வியாபாரிகள் ஏமாற்றம்கடலூர் மாவட்டம், வடலூரில் ராகவேந்திரா சிட்டி தெடல் அருகே வாராதோறும் சனிக்கிழமை  ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு வடலூர், குறிஞ்சிப்பாடி, வடக்கு மேலூர், கல்குணம், குள்ளஞ்சாவடி,கருங்குழி, வடக்குத்து, சத்திரம், வெங்கடம்பேட்டை, உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்கள் அல்லது வெளி மாவட்டங்களில்  இருந்து விவசாயிகள் தாங்கள் வளர்த்த வரும் கால்நடையான ஆடுகளை விற்பனை செய்வது வழக்கம் இந்நிலையில் இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆட்டு சந்தை இன்று விடியற் காலை 2 மணியிலிருந்து துவங்கப்பட்டது. 


இங்கு வியாபாரிகள் கடலூர், விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், மதுரை, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் ஆடுகள் வாங்கிச் சென்றனர் ஒரு ஆட்டின் குறைந்த விலை 4 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 8000 வரை விலையில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன சுமார் 500க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன சுமார் 20,30 லட்சத்திற்கு மட்டுமே ஆடுகள் விற்பனையாகி உள்ளது. 

இதற்கு முன்பு சேத்தியாத்தோப்பு ஸ்ரீமுஷ்னம், பாப்பாகுடி, மீன்சுருட்டி ஆகிய கிராமங்களில் இருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்காக இங்கு கொண்டுவருவார் தற்பொழுது அந்தந்த பகுதிகளில் நடக்கும் சந்தைகளில் ஆடுகள் விற்பனையாவதால் ஆடுகளின் வரத்து குறைந்துள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2.5 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது,பொங்கல் பண்டிகையன்று ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது.என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது குறைந்த அளவிலே ஆடுகள் வரத்து வந்துள்ளதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்றனர்.

No comments:

Post a Comment