பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில்நிலக்கரி சுரங்கம் கைவிட்டது சம்பந்தமாக எடப்பாடி யாருக்கு வாழ்த்து தெரிவித்துசேத்தியாத்தோப்பபில் எம்எல்ஏ அருண்மொழி தேவன் தலைமையில் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 9 April 2023

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில்நிலக்கரி சுரங்கம் கைவிட்டது சம்பந்தமாக எடப்பாடி யாருக்கு வாழ்த்து தெரிவித்துசேத்தியாத்தோப்பபில் எம்எல்ஏ அருண்மொழி தேவன் தலைமையில் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் சேத்தியாத்தோப்பு கிழக்கு நிலக்கரி சுரங்கம், பாளையங்கோட்டை நிலக்கரி சுரங்கம் மற்றும் தஞ்சாவூர் நிலக்கரி சுரங்கம் என மூன்று நிலக்கரி சுரங்கத்திட்டத்தை மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் கைவிடப்படுவதாக அறிவித்துள்ளார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் விவசாயிகளை பாதிக்கும் எத்தகைய திட்டங்களையும் கொண்டு வரக்கூடாது என  முன்னாள் முதல்வரும் தற்போதைய கழகப் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி   சட்டமன்றத்தில் சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மூலம் கொண்டு வந்து விவசாயிகளை பாதிக்கும் எத்தகைய திட்டங்களையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் கொண்டுவரக் கூடாது என  வலியுறுத்தினார். 

அதன்படி தற்போது புதிய நிலக்கரி சுரங்க எடுப்புத் திட்டங்கள் மூன்று இடங்களில் கைவிடப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு வந்ததையடுத்து இதற்குக் காரணமான தமிழக முன்னாள் முதல்வரும், கழகப் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிச்சாமி தான் அவரின் முயற்சியால் தான் இது சாத்தியமாயிற்று என்று கூறி சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி அதிமுக எம்எல்ஏவுமான அருண்மொழிதேவன் தலைமையில் கழக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுடன் இணைந்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.  


இந்த வெற்றி கொண்டாட்டத்தின் போது மேற்குமாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் உமா மகேஸ்வரன், கழக அமைப்புச் செயலாளர்  முருகுமாறன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் ஸ்ரீமுஷ்ணம் நவநீதகிருஷ்ணன், கீரப்பாளையம் கிழக்கு விநாயகமூர்த்தி, கீரைமேற்கு கருப்பன், கம்மாபுரம் ஒன்றியம் மதுரை முனுசாமி, சின்ன ரகுராமன், மேனகா விஜயகுமார், சேத்தியாதோப்பு நகரச்செயலாளர் எஸ் ஆர். மணிகண்டன், முன்னாள் நகரச்செயலாளர் எஸ் கே நன்மாறன், கடலூர் மேற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் வீரமூர்த்தி, புவனகிரி மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் பிரித்திவி, சேத்தியாத்தோப்பு நகர துணை செயலாளர் சம்பத்,புவனகிரி நகரச் செயலாளர் செல்வகுமார், சேத்தியாத்தோப்பு பேரூராட்சிவார்டு கவுன்சிலர் கே பி ஜி கார்த்திகேயன், ராஜாசாமிநாதன், வளையமாதேவி செல்வராஜ், சேத்தியாத்தோப்பு நகர அவைத்தலைவர் ராமலிங்கம், லட்சுமி நாராயணன், லலிதா, இந்திரா, சங்கர், பாலு, நேரு உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 

No comments:

Post a Comment

*/