கடலூர் மாவட்டம்திருமுட்டம் அருகே ஆதிவராகநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மாவட்ட அளவில் வந்த பிரச்சார வாகனப் பேரணியை ஊராட்சி மன்றத்தலைவர் இளவரசன் துவக்கிவைத்து மாணவர்களை அரசுப்பள்ளியில் சேர்ப்பதன் பயன்கள் பற்றிப் பேசினார். பேரணிக்கு வட்டார வளமைய மேற்பாவையாளர் அருள்சங்கு தலைமையேற்று அரசுப்பள்ளியில் சேர்ப்பதால் மாணவர்களுக்குக் கிடைக்கும் சலுகையான காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், நானே முதல்வன்,மேற்படிப்புகளில் 7%இடஒதுக்கீடு இவைகளைப் பற்றி பேசி குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்கவேண்டும் என வலியுறுத்தினார்.
ஆசிரியர் பயிற்றுனர் பாலசுப்புரமணியன் துண்டு பிரசுரங்களை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இல்லம் தேடிக்கல்வி ஒருங்கினைப்பாளர் ஆல்பர்ட் பேரணியை வழிநடத்தினார். பேரணியில் ஆசிரியர்கள் மாலதி, ஜெயக்குமார், அபிஷேகராயர்,இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்கள் ராஜலெட்சுமி, பாரதி, சிவரஞ்சனி ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் அருள்வடிவேலன் கலந்து கொண்ட அனைவருக்கும்நன்றி கூறினார்.
No comments:
Post a Comment