கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே கரைமேடு பகுதியில் சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.
மேலும் இதே சாலையில் விக்கிரவாண்டி-தஞ்சை நான்கு வழிச்சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெற்றும் வருகிறது. இந்நிலையில் இந்த சாலையில் கும்பகோணத்திலிருந்து-சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசுப்பேருந்து ஒன்று கரைமேடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராமல் கட்டுப்பாட்டை இழந்து பாசன வாய்க்காலில் பாய்ந்தது. இதனால் பேருந்தில் பயணம் செய்தவர்கள்பலரும் அதிர்ச்சியில் பயத்துடன் அலறினார்கள். அப்போது பேருந்தில் பயணம் செய்த 36 பேரில் 20- பயணிகள் காயமடைந்தனர். உடனடியாக அவர்களை அருகிலிருந்த கரைமேடு கிராமத்தினர், அவ்வழியாக சென்றவர்கள் என பலரும் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர்.
அப்போது காயமடைந்தவர்களில் 4 பேர் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையிலும், 16 பேர் சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தில் சிக்கியபேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சம்பவஇடத்திலிருந்து திடீரென மாயமானார்கள். விபத்து நடந்தப் பகுதியில் சாலை குறுகலாகவும், பாசன வாய்க்காலும் செல்கிறது. இந்நிலையில் இது குறித்த எச்சரிக்கை எதுவும் செய்யாததால் நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என அப்பகுதியினர் வேதனையோடு தெரிவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment