குறிஞ்சிப்பாடி எஸ்.கே.எஸ் நகர் ஆனந்த விநாயகர் திருக்கோயிலில் பால்குட அபிஷேகம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 29 April 2023

குறிஞ்சிப்பாடி எஸ்.கே.எஸ் நகர் ஆனந்த விநாயகர் திருக்கோயிலில் பால்குட அபிஷேகம்

குறிஞ்சிப்பாடி எஸ்.கே.எஸ் நகர் ஆனந்த விநாயகர் திருக்கோயிலில் பால்குட அபிஷேகம் நடைபெற்றது



கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் உள்ள எஸ்.கே.எஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள ஆனந்த விநாயகர் திருக்கோயிலில் விநாயகப் பெருமானுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர் இதற்காக குறிஞ்சிப்பாடி மாரியம்மன் கோவிலில் இருந்து 250 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்களுடன் குறிஞ்சிப்பாடி முக்கிய வீதிகள் வழியாக எஸ் கே எஸ் நகர் பகுதியில் உள்ள ஆனந்த விநாயகர் திருக்கோவிலுக்கு வந்து விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டு நேர்த்தி கடன் செலுத்தினார். 

முன்னதாக காலை ஏழரை மணிக்கு திருக்கோவிலில் மகா கணபதி யாகம் செய்யப்பட்டு ஆனந்த விநாயகருக்கு மகாதீபாரனை நடைபெற்றது.மேலும் மங்கள இசை நிகச்சி விநாயகர் வேடமிட்டு நடனம் உள்ளிட்டவை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

No comments:

Post a Comment

*/