கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம் மற்றும் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் திட்டம் மற்றும் வளர்ச்சிப் பணி கூடுதல் ஆட்சியர் மதுபாலன் உள்ளிட்டோர் முன்னிலையில் குறிஞ்சிப்பாடி மற்றும் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து துறை அரசு அதிகாரிகளும் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது ஆய்வுக் கூட்டத்திற்கு முன்னதாக பூவானிக்குப்பம் பூண்டியாங்குப்பம் ஆதிநாராயணபுரம் தானூர் கொத்தவாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டிருந்த பள்ளி கட்டிடம் மற்றும் அரசு நியாய விலை கடைகளை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர் தொடர்ந்து குறிஞ்சிப்பாடி சட்டமன்ற அலுவலகத்தில் பொதுமக்களுக்கு இணைய வழி சேவைகளை செய்வதற்காக இ சேவை மையத்தையும் துவங்கி வைத்தார்.
No comments:
Post a Comment