கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே காவனூர் கிராமம் உள்ளது. இக்கிராமத்திற்கு தினந்தோறும் தனியார் பேருந்து பகல் 12 மணி அளவில் வந்து செல்வது வழக்கம். இன்றும் சுமார் 12 மணி அளவில் விருத்தாச்சலத்தில் இருந்து காவனூர் நோக்கி வந்தபோது கொடுமனூர் பேருந்து நிறுத்தம் வளைவில் பேருந்து
திரும்பிய பொழுது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள பெரிய வாய்க்காலில் கவிழ்ந்தது. பேருந்தில் ஆறுபேர் மட்டும் பயணம் செய்தனர். இதில் ஒருவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டதாகவும் அவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் மற்றைய ஐந்து பேரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் தெரிகிறது. இப்பகுதி கிராமத்தினர், தெரிவிக்கும்போது பேருந்தில் குறைவான நபர்கள் இருந்ததால் ஓரளவுக்கு விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது. பேருந்தின் முழு இருக்கை கொள்ளளவும் பயணிகள் இருந்தால் நிலைமைநினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது .
இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுவதால் குறுகிய நிலையில் உள்ள சாலையை அதிகாரிகள் விரிவாக்கம் செய்தால் விபத்துக்கள் தவிர்க்கப்படும் என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment