வடலூர் அருகே ரயில் முன் பாய்ந்து இளம் பெண் தற்கொலை
கடலூர் மாவட்டம், வடலூர் கோவிந்தசாமி நகர் பகுதியில் வசிப்பவர் உத்திராபதி இவரது மகள் நிஷா வயது 17 நெய்வேலி இந்திரா நகர் பகுதியில் உள்ள ஆகாஷ் பிஜோ கோச்சிங் சென்டரில் நீட் தேர்வுக்கான பயிற்சி பெற்று வருகிறார்.
பெங்களூரில் இருந்து காரைக்காலுக்கு செல்லும் பாசஞ்சர் ரயில் மாலை 5.30 அளவில் வடலூர் வழியாக கடலூரைநொக்கி சென்ற பொழுது ரயில்வே தண்டவாளத்தில் நின்ற நிஷா திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற வடலூர் போலீஸ்சார் அளித்த தகவலின் பெயரில் கடலூர் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வடலூர் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment