விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மாவட்ட ஒருங்கிணைத்த செயற்குழு கூட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 4 April 2023

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மாவட்ட ஒருங்கிணைத்த செயற்குழு கூட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மாவட்ட ஒருங்கிணைத்த செயற்குழு கூட்டம் வடலூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது

 


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் வடலூரில் இன்று கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் காட்டுமன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 



மேலிட பொறுப்பாளர் கட்சியின் மாநில செயலாளர் பொதினிவளவன் நோக்க உரை ஆற்றினார் கடலூர் மாநகராட்சி துணை மேயர் மற்றும் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வழக்கறிஞர் பா. தாமரைச்செல்வன் தொடக்க உரையாற்றினார் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் துரை. மருதமுத்து கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் பால. அறவாழி சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வ.க.செல்லப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் வடலூர் நகர செயலாளர் கண்ணன் வரவேற்புரையாற்றினார் இந்த கூட்டத்தில் மாவட்ட பொருளாளர்கள் கெய்க்வாட் பாபு ,கங்கை அமரன், மாவட்ட துணை செயலாளர்கள் வழக்கறிஞர் இல.திருமேனி, வீர.திராவிடமணி,செல்வமணி சட்டமன்ற தொகுதி செயலாளர்கள் குறிஞ்சிப்பாடி ஜெயக்குமார் காட்டுமன்னார்குடி மணவாளன் விருத்தாசலம் அய்யாயிரம் கடலூர் அறிவுடைநம்பி சிதம்பரம் யாழ்திலிபன் நெய்வேலி அ.உ.அதியமான் புவனகிரி வே.சுதாகர் பண்ருட்டி  பவர் ரமேஷ் உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றிய நகர முகாம் நிர்வாகிகள் 500 கற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். 



இந்த கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

1. வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி கடலூரில் சனநாயகம் காப்போம் என்கிற தலைப்பில் மாபெரும் எழுச்சி பேரணி நடத்துவது

2. வரும் 7,8,9 ஆகிய தேதிகளில் ஒன்றிய நகர செயற்குழு கூட்டங்கள் நடத்துவது

3. நெய்வேலி என்எல்சி நிர்வாகம் நிலம் கையகப்படுத்துவதற்க்கு ரூபாய் 25 லட்சம் தருவதை வரவேற்கத்தக்கது

4.நிலம் இல்லாத தொழிலாளர்களுக்கும் இழப்பீடு வழங்குவது

5 பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலத்தில் ஒன்றிய அரசு நிலக்கறி சுரங்கம் அமைப்பதை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது

6.கடலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவகல்லூரியாக அறிவிக்கப்பட்ட ராஜா முத்தையா மருத்துவ  கல்லூரியை தமிழக அரசு முழுமையாக சுகாதார துறையின் கீழ் முழுமையாக கொண்டு வர வேண்டும்

7.விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் மீது போடப்பட்ட 110 வழக்குகளை உடனடியாக தமிழக அரசு நீக்க வேண்டும்

என்று தீர்மானிக்கபட்டது.

No comments:

Post a Comment

*/