கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் இயங்கி வரும் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட குணமங்கலம், கள்ளிப்பாடி, ஸ்ரீ புத்தூர், நாச்சியார்பேட்டை, சாவடிக்குப்பம், காவனூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து நாள்தோறும் ஸ்ரீமுஷ்ணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பல்வேறு தரப்பு நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
தற்பொழுது இங்கு ஒரு டாக்டர் மட்டும் பணியிலிருந்து வருவதாக கூறப்படும் நிலையில் , அந்த ஒரு மருத்துவரும் தாமதமாக காலை பதினோரு மணிக்கு மேல் பணிக்கு வருவதாகநோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், பொதுமக்கள் எனப் பலரும் குற்றம் சாட்டுகின்றனர் மருத்துவர் வரும் வரை நோயாளிகள்சிகிச்சை பெறுவதற்குக் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதாகக் கூறுகின்றனர்.
அதோடு பலமுறை நோயாளிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் மேலதிகாரிகளிடம் ஸ்ரீமுஷ்ணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும் என கோரிக்கை வைத்தும் அது சம்பந்தமாக இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறுகிறார்கள். மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பலரும் எதிர்பார்ப்போடு கோரிக்கை வைக்கின்றனர்.
No comments:
Post a Comment