உய்யக்கொண்டராவி அரசுப் பள்ளியில் புதிய கணினி ஆய்வகம் திறப்பு விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 21 April 2023

உய்யக்கொண்டராவி அரசுப் பள்ளியில் புதிய கணினி ஆய்வகம் திறப்பு விழா

 


உய்யக்கொண்டராவி அரசுப் பள்ளியில் புதிய கணினி ஆய்வகம் திறப்பு விழா




கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த உயர் கொண்ட ரவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ2,50,000 புதிய கணினி ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் விருதாச்சலம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்  P.S ஜெயச்சந்திரன் அவர்கள் தலைமை வகித்தார். கடலூர் கிருஷ்ணா பல்நோக்கு மருத்துவமனை நிறுவனர் K.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் புதிய கனினி ஆய்வகத்தை திறந்து வைத்தார். 



கணினி மையத்திற்கு ரூபாய் 2 லட்சம் நன்கொடை வழங்கிய ஜே கே வைஷ்ணவி அவர்கள் காணொளி காட்சி மூலம் சிறப்பு உரையாற்றினார். கம்மாபுரம் வட்டார கல்வி அலுவலர் கலைச்செல்வி கோ.ஆதனூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் கோபாலகிருஷ்ணன் உயர் கொண்ட ரவி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆர் ரேகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா. தீனதயாளன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். 


மேலும் நெய்வேலி மூத்த வழக்கறிஞர் ஆர் வெங்கட்ரமண ராமலிங்கம் சென்னை டிரஸ்டி ஆல்ட்டிஸ் ஃபவுண்டேஷன் ஸ்ரீகாந்த் TAAS முன்னாள் மாநில பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், வீணங்கேணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் போஸ்கோ ஓட்டிமேடு பள்ளியின் தலைமை ஆசிரியர் சரவணன் மும்முடி சோழகன் தலைமை ஆசிரியர் அருள் பிரகாசம் ஊமங்கலம் உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மணிகண்டன் ஆகியோர் சிறப்புரையாற்றினார். 



இறுதியில் உயர் கொண்ட ரவி பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் அறிவழகன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

.

No comments:

Post a Comment

*/