வடலூர் முஸ்லிம் ஜமாத் சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது
கடலூர் மாவட்டம் வடலூர் முஸ்லிம் ஜமாத் சார்பில் ரம்ஜான் பண்டிகையையொட்டி வடலூர் வாரச்சந்தை அருகில் உள்ள ஈத்கா திடலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பின்னர் ஜமாத் தலைவர் பக்ருதீன் தலைமையில் தொழுகை முடிந்து ஈத்கா திடலில் இருந்து வடலூர் நான்கு முனை சந்திப்பு வரை ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பேரணியாக வந்தனர்.
இந்தப் பேரணியில் அன்பு, இரக்கம், பாசம், உலக அமைதி, சமூக மத நல்லிணக்கணம் சகோதரத்துவத்தை கடைபிடிக்க வேண்டியும் உறுதிமொழி எடுத்தனர். மேலும் உலக அமைதிக்காக சிறப்பு பிரார்த்தனையும் செய்தனர். இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். இதில் இமாம் நிர்வாகிகள், சல்மான் பாரிஸ், நிர்வாகிகள், மற்றும் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment