8 பேர் படுகாயத்துடன் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதி.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், விருத்தாசலம் அடுத்த விளாங்காட்டூர் கிராமம் அருகே மாலை சுமார் 04.00 மணி அளவில் ஏற்காட்டில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற ஸ்விப்ட் டிசையர் கார் மற்றும் குறிஞ்சிப்பாடியில் இருந்து மதுரையை நோக்கி சென்ற ஹூண்டாய் I20காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில்,ஏற்காட்டில் இருந்து சிதம்பரம் நோக்கி,காரில் கைக்குழந்தை சிறுவர்கள் உட்பட எட்டு பேர் படுகாயம், அடைந்தனர்.
அதேபோல் குறிஞ்சிப்பாடியில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த காரில்,ஐந்து பேர் பயணம் செய்தனர் அதில் ஓட்டுநர் மதுரையைச் சேர்ந்த வைரவன் சம்பவ இடத்திலேயே பலியானார்,உடனே அருகில் இருந்தவர்கள் காயம் பட்டவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,அங்கு சிகிச்சை பெற்று கடலூர் மற்றும் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,இந்த விபத்து குறித்து விருத்தாசலம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..மேலும் விபத்தில் இறந்தவரை உடற்கூறு ஆய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
No comments:
Post a Comment