அதன்பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் அசோகன் மேற்பார்வையில் கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய 7 உட்கோட்டங்களில் உள்ள காவல் நிலையங்கள், மதுவிலக்கு அமல்பிரிவு, மாவட்ட குற்றப்பிரிவு விசாரணை வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் தலைமறைவு குற்றவாளிகள் மீது நிலுவையில் உள்ள நீதிமன்ற பிடியாணைகள் நீதிமன்றம் மூலம் பெறப்பட்டு, பிடியாணைகள் நிறைவேற்ற ஒவ்வொரு காவல் நிலையத்திலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த 230 தலைமறைவு குற்றவாளிகள் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
982 தலைமறைவு குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சரண்டராகினர். மொத்தம் 1212 பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டன. கடலூர் மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளையும் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய உதவி ஆய்வாளர்கள் அமிர்தலிங்கம், சிவகுருநாதன், சிறப்பு உதவி ஆய்வாளர் புஷ்பராஜ் ஆகியோர்கள் தலைமையில் 3 தனிப்படையினர் மூலம் பிடித்து பிடியாணைகள் நிறைவேற்ற கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம் உத்தரவிட்டுள்ளார்
No comments:
Post a Comment