கிராம சாலைகளை மேம்படுத்திட வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 3 April 2023

கிராம சாலைகளை மேம்படுத்திட வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


கிராம சாலைகளை மேம்படுத்திட வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பு.கொளக்குடி ஊராட்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த கிராமத்தில் அனைத்து கிராம சாலைகளும் மிகவும் மோசமான நிலையில் மழைக்காலங்களில் சேரும் சகதியமாக உள்ளது பள்ளி மாணவ மாணவிகளை மழைக் காலங்களில் தெருக்களில் இருந்து பேருந்துகளில் பள்ளி கல்லூரிகளுக்கு பயணம் செய்ய வரும் பொழுது மழைதண்ணீரில் நீந்தும் சேற்றில் நடந்து செல்லும் அவலம் தொடர்கதையாகி வருகிறது இது குறித்து பல்வேறு முறை ஊராட்சி நிர்வாகத்திடமும் மேல்பவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் மனுக்கள் அளித்தும் பலன் அளிக்காத காரணத்தால் தற்பொழுது எங்களது ஊராட்சியில் ஜெ.ஜெ.எம் என்கின்ற ஜில் ஜீவன் திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் முழுமையான அளவிற்கு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது ஆனால் ஊரக வளர்ச்சி துறை மூலம் அதிக அளவிற்கு குடிநீர் ஆதாரங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்படுவதால் எங்களுடைய கிராம ஊராட்சி சாலைகளை மழைக்காலங்களில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்த்திடவும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் நலன் கருதி எங்களுடைய கிராம ஊராட்சி சாலையை மேம்படுத்தி வடிகால் அமைத்திட நிதி ஆதாரங்களை ஒதுக்கீடு செய்திடவும் பேருந்து நிழற்குடை அமைத்திடவும் வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் சாலையில் அமர்ந்து அரசுமற்றும் தனியார் பேருந்தை மரித்து மறியலில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மருதூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்து தாங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்ததின் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் காலை 10:30 மணி முதல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது

No comments:

Post a Comment