சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் அதிமுக ஒன்றியப்பெருந்தலைவர் சார்பில் வெற்றிக் கொண்டாட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 21 April 2023

சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் அதிமுக ஒன்றியப்பெருந்தலைவர் சார்பில் வெற்றிக் கொண்டாட்டம்.

சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் அதிமுக ஒன்றியப்பெருந்தலைவர் சார்பில் வெற்றிக் கொண்டாட்டம்.
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை வரவேற்று அதிமுக புவனகிரி மேற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றியப் பெருந்தலைவருமானசி.என்.சிவப்பிரகாசம் தலைமையில் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் உள்ள  எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. 


பின்னர் வெடிவெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாகமாக அதிமுகவினர் கொண்டாடி மகிழ்ந்தனர் நிகழ்ச்சியின் போது ஒன்றிய துணைச் செயலாளர் பிரித்திவி ஊராட்சி செயலர் ஜெயசீலன், நகர செயலாளர் எஸ் ஆர் மணிகண்டன் முன்னாள் நகர் செயலாளர் எஸ் கே நன்மாறன், மாவட்ட பிரதிநிதி தெய்வ ராஜ குரு,லட்சுமி நாராயணன், செல்வராஜ், சாமிநாதன், சங்கர் மற்றும்  அதிமுக கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment