விருத்தாசலம் தினசரி காய்கனி மார்க்கெட்டில் உள்ள கட்டண கழிப்பறை பூட்டி இருப்பதை கண்டித்தும் மார்க்கெட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக குடிப்பதற்கு தண்ணீர் திறந்து விடாததை கண்டித்தும் காய்கறி மார்க்கெட் அருகில் சாலை விரிவாக்கத்தின் போது தோண்டப்பட்ட கழிவுநீர் கால்வாயை உடனடியாக சீரமைக்க கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கட்சியின் மார்க்கெட் கிளை செயலாளர் இதயத்துல்லா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அசோகன் வட்ட செயலாளர், கலைச்செல்வன் மாவட்ட குழு உறுப்பினர் கண்டன உரையை நிகழ்த்தினர். நகர குழு மார்க்கெட் சேகர், சத்தியா , கட்சி உறுப்பினர்கள் கவிதா, கர்ணன், தினேஷ்குமார் மற்றும் காய்கனி மார்க்கெட் கட்சித் தோழர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டம் நடத்திய தோழர்களிடம் நகர மன்ற ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக கட்டண கழிப்பறை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவும்,குடிப்பதற்கு குடிநீரும் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். இதன் அடிப்படையில் இரண்டு மணி நேரத்திற்குள்ளாக கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment