விருதாச்சலம் அடுத்த ஆர்.சி கோவிலான்குப்பம் கிராமத்தில் 6ஆம் புனித வெள்ளி முன்னிட்டு 6 கிராமம் மக்கள் கலந்துகொண்டு சிலுவை பாதை வழிபாடு நடைபெற்றது
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த விராரெட்டிகுப்பம் பங்கை உள்ளடக்கிய ஆர்.சி கோவிலான்குப்பம் கிராமத்தில் 6ஆம் வெள்ளியை முன்னிட்டு 6 கிராமம் மக்கள் கலந்து கொண்ட சிலுவை பாதை வழிபாடு நடைபெற்றது.
மனக்கொல்லை கிராமத்தில் இருந்து புறப்பட்ட இயேசு நாதர் சுருபம் பதித்த சிலுவை விராரெட்டிகுப்பம் பங்கு தந்தை மைக்கேல் துரைராஜ் அவர்கள் ஒருங்கிணைப்பில் கிராம மக்களுடன் 12 ஸ்தலங்களில் ஜெபங்களுடன் பேரணியாக சென்று இறுதியில் ஆர்.சி கோவிலான்குப்பம் புனித சவேரியார் ஆலயத்தில் நிறைவு பெற்றது பின்னர் நடைபெற்ற சிறப்பு திருப்பலி 6 கிராம பங்கை சேர்ந்த மக்கள் திராளாக கலந்து கொண்டு வழிப்பாடு மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சி 500 மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
No comments:
Post a Comment