விருத்தாசலம் அருகே விதவைப் பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபர் கைது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 1 April 2023

விருத்தாசலம் அருகே விதவைப் பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபர் கைது.


விருத்தாசலம் அருகே விதவைப் பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபர் கைது.


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சாத்துக்குடல் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுளா என்பவருக்கு கடந்த 18.12. 2013 அன்று தொரவளுரை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்கு திருமணம் நடைபெற்றது. 8.12. 21 உடல் நலம் காரணமாக மஞ்சுளாவின் கணவர் சுப்ரமணியன் இறந்து விட்டார்.இந்நிலையில் சாத்துகுடலில் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். 



அதே கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் கலைச்செல்வன் மஞ்சுளாவை காதல் செய்வதாகவும் திருமணம் செய்வதாகவும்  மஞ்சுளாவிடம் ஆசை வார்த்தை கூறி கர்ப்பம் ஆக்கினார். தன்னை திருமணம் செய்து கொள்ள கொள்ளும்படி மஞ்சுளா கூறிய போது மறுத்துவிட்டார். மேலும் சுப்ரமணியன் உறவினர் ஏழு பேர் சேர்ந்து மஞ்சுளா வீட்டிற்கு சென்று தகாத வார்த்தை பேசி மிரட்டல் விடுகின்றனர்.

 

மஞ்சுளா கொடுத்த புகாரின் அடிப்படையில் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ரேவதி தலைமையில் விசாரித்து கலைச்செல்வனை கைது செய்தனர். மேலும் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். விதவைப் பெண்ணை திருமணம் செய்ததாக கூறி கர்ப்பமாகி ஏமாற்றி விஷயம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

*/