விருத்தாசலத்தில் புதியதாக கட்டப்பட்ட ரயில்வே ஊழியரின் வீட்டின் பின்பக்க பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் பணம் 5 பவுன் நகை மற்றும் வீட்டில் வைக்கப்பட்ட பாத்திரம் உள்ளிட்டவை மர்ம நபர் திருட்டு காவல்துறையினர் விசாரணை.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட வி என் ஆர் நகர் தெருவில் வசிக்கும் மணிகண்டன், மணி, ஆகிய சகோதரர்களான இவர்கள் விருத்தாசலம் ரயில்வே ஊழியராக பணியாற்றி வருகின்றனர், இவர்கள் இருவரும் திருமணம் ஆன நிலையில், வி என் ஆர் நகரில் இருவரும் சேர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வீடு கட்டினர், இன்னும் இரண்டு மாதங்களில் வீடு குடி போகும் நிலையில், மணியின் சகோதரர் மணிகண்டன் புதிய பாத்திரங்கள் குத்துவிளக்கு வெள்ளி பொருட்கள் மற்றும் டிவி உள்ளிட்ட பொருட்கள் வைத்துள்ளார்.
வீட்டின் முன் பகுதியில், தண்ணீர் காக போர் போட இன்று மாலை மணிகண்டன் சகோதரர் மணி வந்துள்ளார், அப்பொழுது வீட்டின் உள்ளே சென்று பார்த்த பொழுது,பீரோ உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் பீரோவில் வைக்கப்பட்ட ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாய் பணம் மற்றும் ஐந்து பவுன் நகை, வெள்ளி பொருட்கள் பாத்திரங்கள் ஆகியவற்றை மர்ம நபர் திருடி சென்றனர், இது குறித்து விருத்தாசலம் காவல் நிலையத்துக்கு புகார் அளித்துள்ளார் புகாரின் பேரில் அங்கு வந்த விருத்தாசலம் கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் தலைமையிலான காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்
No comments:
Post a Comment