கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்ணில் கருப்பு துணி கட்டி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வருவாய் கிராம ஊழியருக்கு இணையாக மாது என்கிற சிறப்பு பென்ஷன் 6 ஆயிரத்து 750 அகவிலைப்படியில் வழங்கிட வேண்டும், அரசு துறை காலி பணியிடங்களை தகுதியுள்ள சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களை நியமித்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு திட்டத்துடன் இணைத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்ணில் கருப்பு துணி கட்டி கோஷங்கள் எழுப்பினர்.
தமிழ்நாடு சத்துணவு சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சேவியர் வரவேற்புரை ஆற்றினார். சுமதி கலையரசி சுப்பிரமணியன் நல்லதம்பி பத்மாவதி இளங்கோவன் பரமசிவம் முருகேசன் பச்சமுத்து பிச்சம்மாள் மகேஸ்வரி விஸ்வராணி செந்தமிழ் செல்வி ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
பரமசிவம் கிருஷ்ணமூர்த்தி கணபதி ஞானஜோதி தெய்வசிகாமணி ஆகியோர்கள் கோரிக்கை விளக்க உரையாற்றினர். சிறப்பு அழைப்பாளராக சீனிவாசன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
இறுதியில் தமிழ்நாடு அரசு சங்கங்களின் கூட்டமைப்பு மல்லிகா நன்றியுரை ஆற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment