இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி கவிதா கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் பின்னர் ஆய்வாளர் கவிதா பேசும் போது இப்பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைத்ததினால் எங்களுக்கு பாதி பணிச்சுமை குறைந்தது போல் உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் தற்போதுள்ள கால நிலையில் மூன்றாவது கண் என்பது (கண்காணிப்பு கேமராக்கள்) இரண்டரை போலீசுக்கு சமமாக உள்ளது எளியவர்களுக்கு உணவு அளிப்பதே புண்ணியமென்று கூறுவார்கள் ஆனால் தற்போதுள்ள கால நிலைகளில் தங்கம் விற்கும் விலையில் தங்கத்தை வாங்குவதற்கு மக்கள் சிறுக சிறுக சேர்த்து அதன் மூலம் தங்க நகைகள் வாங்கும் பொதுமக்கள் அதை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதில் தான் புன்னியம் என்றும் நகைகளை தொலைத்த மக்கள் படும் துன்பம் என்பது சொல்லமுடியாத ஒரு விஷயம் அதை காப்பத்தக்கூடிய புன்னியம் ஒரு இடத்தில் கிடைக்கும் என்றால் அதை விட புன்னியம் மற்றும் பொது சேவை எதுவுமில்லை என்றும் இப்பகுதியில் நான்கில் மூன்று பங்கினை கண்காணிப்பு கேமராக்கள் செய்துவிடுகிறது என்றும் ஒரு மடங்கு மட்டுமே எங்கள் பணியாக இருக்கும் என்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர் லட்சுமி ரவிச்சந்திரன், தலைவர் ப. குமார் மற்றும் சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மணிகண்டன் நன்றியுரை நிகழ்த்தினார்
No comments:
Post a Comment