கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்த வழுதலம்பட்டு கிராமத்தில் பங்குனி உத்திர திருவிழாவின் ஒரு பகுதியாக சுப்பிரமணிய சுவாமி வீதி உலா நடைபெற்றது.
முதலில் சுப்ரமணியசாமி மற்றும் வள்ளி தெய்வானை ஆகியோருக்கு சிறப்பான அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது பின்னர் முருகப்பெருமானின் பாடல்களை பாடி மலர் தூவி முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.
பின்னர் சுவாமி ஊர்வலமாக அப்பகுதி கிராம இளைஞர்கள் மூலம் தோலில் சுமந்தபடி கோவில் வளாகத்தை சுற்றி வந்து பின்னர் தாலாட்டுடன் சுப்பிரமணியர் பாரி விளையாட்டு நடைபெற்றது.
கடந்த 26/ 3/ 2023 அன்று குடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில் தினந்தோறும் உபயதாரர்கள் மூலம் சாமி வீதி உலா நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் வருகின்ற 04/04/2023 2023 அன்று பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை அரோகரா அரோகரா என்ற கோஷத்துடன் இருகை கூப்பி வனங்கினார்
இறுதியில் பக்தர்களுக்கு சிறப்பான அன்னதானம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment