வடலூர் தூய இருதய ஆண்டவர் தேவாலயத்தில் குருத்துதோலை ஞாயிறு வழிபாடு நடைபெற்றது
கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் தூய இருதய ஆண்டவர் தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு வழிபாடு நடைபெற்றது.
வடலூர் பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக புறப்பட்ட கிறிஸ்தவர்கள் ஓசான பாடல்களை பாடிக்கொண்டு கையில் குருத்தோலைகளை ஏந்தியபடி வடலூர் தூய இருதய ஆண்டவர் தேவாலயத்திற்கு பவனியாக வந்தடைந்தனர்.
பின்னர் தேவாலய வளாகத்தில் பங்குத்தந்தை லூர்து ஜெயசீலன் தலைமையில் சிறப்பான திருப்பலி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.
No comments:
Post a Comment