கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தம்பிக்குநல்லான் பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர்21) என்ற இளைஞர் சிதம்பரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரியில் இருந்து வீட்டிற்கு சந்தோஷமாக வந்த அவர் திடீரென ஏற்பட்ட குடும்பப் பிரச்சனை, அதனால் எழுந்தசண்டையால் வயல்வெளிக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்தார்.
அக்கம் பக்கத்தினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சந்திரசேகரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். வீட்டிற்கு சந்தோஷமாக கல்லூரி விட்டு வந்த இளைஞர் திடீரென ஏற்பட்ட குடும்பச் சண்டையில் தற்கொலை செய்து கொண்டது கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
No comments:
Post a Comment