கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பம் அடுத்த குறவன்குப்பத்தில் உள்ள டிவைன் கிராஸ் மெஷின் மனவளர்ச்சி குன்றிய சிறப்பு பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் என்எல்சி இந்தியா லிமிடெட் சுரங்க மனிதவள மேம்பாட்டு துறை துணை பொது மேலாளர் ஓ.எஸ். அறிவு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.
நியூ லைட் சாரிட்டபிள் டிரஸ்ட் ன் தலைமையாசிரியை பாக்கியம் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். ட்ரஸ்டில் நிர்வாகி ராஜாமணி அவர்கள் முன்னிலை வகித்தார் இதனை தொடர்ந்து. நிர்வாகி சகாயராஜா அவர்கள் தலைமையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மன வளர்ச்சி குன்றிய மாணவர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மனித வள மேம்பாட்டு துறை துணை பொது மேலாளர் அவர்கள் பேசுகையில் உடல் குறைபாடுகள் இருந்தும் நாங்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல எங்களாலும் சாதிக்க முடியும் என்று இப்பள்ளி மாணவர்கள் சிறந்த முறையில் நிரூபித்து காட்டியுள்ளனர் எனவே எதிர்காலத்தில் அனைவரும் நல்ல முறையில் கல்வி பயின்று மென்மேலும் வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார் மேலும் பள்ளியில் பணி மேற்கொள்ளும் ஆசிரியப் பெருமக்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்தார்.
இறுதியில் ட்ரஸ்டின் ஆண்கள் விடுதி காப்பாளர் கென்னடி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
No comments:
Post a Comment