இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட குழு கூட்டம் வடலூர் சங்க அலுவலகத்தில் வாலிபர் சங்க மாவட்ட தலைவர் K.சின்னதம்பி தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் வாலிபர் சங்கத்தின் மாநில இணை செயலாளர் செல்வராஜ் மாவட்ட செயலாளர் எஸ்.வினோத் குமார் நிர்வாகிகள் T.பரமசிவம் J.சிவலோகம் பூவை.பாபு S வசந்த் முருகானந்தம் தனவேல் விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
எல்லோருக்கும் கல்வி எல்லோருக்கும் வேலை கேட்டு போராடும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நெய்வேலி NLC யில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை எங்கே என்ற முழக்கத்தை முன் வைத்து வருகின்ற ஏப்ரல் 13 தேதி மாலை 3 மணி அளவில் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி முன்பு பேரணி துவங்கி பாலக்கரை வரை பேரணி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயலாளர் AV.சிங்காரவேலன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். மேலும் ஒன்றிய மாநில அரசுகளில் உள்ள பணியிடங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் கடலூர் மாவட்ட என் எல் சி நிறுவனத்தில் உள்ளுர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில்முன்னுரிமை அடிப்படையில் வழங்கிட வேண்டும் அவுட்சோர்சிங் முறையை திரும்ப பெற வேண்டும் நிலம் கொடுத்த விவசாயிகளின் வாரிசுகளுக்கு நிரந்தர வேலை வழங்கிட வேண்டும்
சிப்காட் நெல்லிக்குப்பம் ஆலைகளினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் கடலூர் மாவட்டத்தில் பெருகிவரும் புற்றுநோய் மரணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
உள்ளிட்ட திர்மாணங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது இந்நிகழ்ச்சியில் மாவட்டத் ஒன்றிய நகர நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் திரளாக கலந்து .
No comments:
Post a Comment