கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி எஸ் கே எஸ் நகரை சேர்ந்தவர் அன்பு செழியன் வயது 46 இவர் தனது மனைவி செல்வி மகள் மற்றும் மகனான ஜெயவரதன்(13), தகசனா (15) ஆகியோருடன் தங்களுக்கு சொந்தமான மாருதி ஆல்டோ காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று வீடு திரும்பினர்.
காரை அன்பு செழியன் அவர்கள் ஓட்டி வந்த நிலையில் கார் வடலூர் ஓ பி ஆர் கல்லூரி அருகே வந்த பொழுது நிலைதடுமாறி சாலையில் நடுவே இருந்த சென்ட்ரல் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது, இதில் தகசனா வயது 15 சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வடலூர் காவல்துறையினர் காரில் இருந்த மூவரை மீட்டு மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சென்டர் மீடியினில் கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் வடலூர் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment