அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி கோடைகாலங்களில் பொது மக்களின் தாகத்தை தீர்க்க அனைத்து இடங்களிலும் நீர் மோர் பந்தல் அமைக்க கட்சியினருக்கு உத்தரவிட்டதையடுத்து முன்னாள் தொழில் துறை அமைச்சரும் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் எம் .சி. சம்பத் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்து வருகிறார்.
நேற்று கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் கடலூர் முதுநகர் பகுதி அ தி மு க சார்பில் பல்வேறு இடங்களில் நீர்மோர் பந்தலை எம்.சி.சம்பத் திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களுக்கு கரும்புச்சாறு ,இளநீர், கூழ் ,நீர்மோர், கூல்டிரிங்ஸ் மற்றும் தண்ணீர் பாட்டில்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட அவைத் தலைவர் சேவல் ஜி. ஜெ. குமார் கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கே. காசிநாதன் முதுநகர் பகுதி செயலாளர் வ. கந்தன் திருப்பாதிரிப்புலியூர் பகுதி செயலாளர் கெமிக்கல் மாதவன் புதுப்பாளையம் பகுதி செயலாளர் வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் மஞ்சக்குப்பம் பகுதி செயலாளர் வெங்கட்ராமன் மாமன்ற உறுப்பினர்கள் ஏ ஜி தர்ஷனா ,வினோத்குமார் ஒன்றிய கவுன்சிலர் வேல்முருகன் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் முதுநகர் மோகன் ஏ ஆர் சி நாகராஜ் வெங்கடேசன் சுரேஷ்குமார் புதுப்பாளையம் அருண் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாட்டினை முதுநகர் பகுதி செயலாளர் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் வ.கந்தன் செய்திருந்தார்.
No comments:
Post a Comment